Rs. 12.50 lakh worth of fuel Sprit , lorry seized for Smuggle to Kerala: two arrested near in Namakkal

ஹரியானாவில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புலாவிற்கு லாரியில் எரிசாராயத்தை கடத்திச் சென்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.மேலும், ரூ. 12.50 லட்சம் மதிப்பிலான எரிசாரயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வட இந்தியாவில் இருந்து தமிழகம் வழியாக கேரளாவிற்கு எரிசாராயம் கடத்தி செல்லப்படுவதாக நாமக்கல் மாவட்ட போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் எஸ்பி அர. அருளரசு உத்திரவின்படி நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ். செந்தில் தலைமையிலான போலீஸார் நாமக்கல் கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கரூர் நோக்கி சென்ற கர்நாடக மாநில பதிவெண் கொண்ட வாகனத்தை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.சோதனையின்போது வாகனத்தில் 35லிட்டர் கொள்ளவு கொண்ட கேன்களில் எரிசாராயம் இருந்துள்ளது. மொத்தம்250 கேன்களில் சுமார் ரூ. 12.50 லட்சம் மதிப்பிலான 8,750 லிட்டர் எரிசாராயம் இருந்ததும் தெரியவந்தது. மேலும்,ஹரியானா மாநிலத்திலிருந்து பாலாஜி கெமிகல்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில், லிக்யூட் குளோரின் என, கேரள மாநிலம் ஆலப்புலாவிற்கு எரிசாரயாம் கடத்திச் சென்றதும் சோதனையின்போது கண்டறியப்பட்டது.

இதையடுத்து எரிசாராயத்ததை கடத்திச் சென்ற விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு எடப்பாளையத்தைச் சேர்ந்த எம். கதிர்வேலு(40), ஆர்.ஞானசம்பத் (44) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும், எரிசாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம், லாரியும் ரூ. 20.5 லட்சம் மதிப்புடையது என, போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் இதேபோல் ஹரியானா மாநிலத்தில் இருந்து தமிழகம் வழியாக கேரளாவிற்கு கடத்திச் செல்லப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எரிசாராயத்தை லாரியுடன் நாமக்கல் மாவட்ட போலீஸார் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!