Rs. 12 lakhs, 7 pounds of jewelry theft, near in Perambalur
பெரம்பலூர் அருகே உள்ள புதுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கராஜ் (55), கடந்த மே. 27ந்தேதி அன்று புதுநடுவலூர் கிராமத்தில் நடக்கும் திருவிழாவிற்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.
இன்று காலை பக்கத்து வீட்டுக்காரர் வீட்டை பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பது குறித்து தகவல் தெரிவித்தார். வீட்டிற்கு வந்த ரங்கராஜ் மற்றும் குடும்பத்தினர் அதிர்சி அடைந்தனர். மேலும், வீட்டினுள் வைக்கப்பட்டு இருந்த 7 பவுன் தங்க நகைகள் மற்றும், ரொக்கம் ரூ. 12 லட்சம் காண போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து பாடாலூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.