Rs .2.85 lakh real estete Owner in plea to money laundering: report to police on the Doughment writer!

பெரம்பலூரில் ரியல்எஸ்டேட் அதிபரிடம் ரூ.2.85 லட்சம் பணமோசடி செய்ததாக பத்திர எழுத்தர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனம் வைத்து நடத்தி வருபவர் முத்தையா (வயது55). பெரம்பலூரில் எளம்பலூh; சாலையில் உள்ள தென்றல் நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 56) பதிவு செய்யப்பட்ட பத்திர எழுத்தராக பணியாற்றிவருகிறார். இவருக்கு சொந்தமான 1 ஏக்கர் 88 சென்ட் நிலம் செங்குணம் கிராமத்தில் உள்ளது.

இந்த நிலையில் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் முத்தையா, பத்திரஎழுத்தர் தங்கராஜூவிற்கு சொந்தமான நிலத்தை ரூ.17 லட்சத்து 10ஆயிரத்திற்கு வாங்குவதற்காக விலைபேசி ரூ.2 லட்சத்து 85ஆயிரம் ரொக்கத்தை தங்கராஜூவிடம் கொடுத்துள்ளார்.

ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி 9 மாதத்திற்குள் தங்கராஜூ மீதமுள்ள தொகை பெற்றுக் கொள்வதற்கும், முத்தையாவிற்கு தனது நிலத்தை பதிவு செய்துகொடுக்கவும் முன்வரவில்லை. ஆனால் கவுள்பாளையத்தை சேர்ந்த சுப்ரமணியத்தின் மகன் ரமேஷிற்கு தனது நிலத்தை விற்பனை செய்து நிலப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.

இதனிடையே நிலம் பதிவிற்காக கொடுத்த முன்பணம் ரூ.2 லட்சத்து 85ஆயிரத்தை திருப்பி தருமாறு முத்தையா, தங்கராஜூவிடம் பலமுறை கேடடுள்ளார். அதற்கு பணத்தை திருப்பி தர மறுத்த தங்கராஜூ, அவரது மகன் கார்த்திக், மகள் மீனா ஆகியோர் சேர்ந்து முத்தையாவை தகாத வார்த்தைகளால் திட்டி அவருக்கு கொலைமிரட்டலும் விடுத்தனர்.

இதில் பாதிக்கப்பட்ட முத்தையா பெரம்பலூர் போலீசில் தங்கராஜ், அவரது மகன் கார்த்திக், மகள் மீனா மற்றும் நிலத்தை முறையற்ற வகையில் வாங்கி பதிவு செய்துகொண்ட ரமேஷ் ஆகியோர் மீது புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!