Rs.366 Crore drinking water project for Perambalur District Sipcots; A. Raja. MP., Thank you to Minister K. N. Nehru!

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரமான குடிநீர் தட்டுப்பாடு நீண்ட காலமாக இருந்து வந்தது. கடந்த 1996-2001 -ஆம் ஆண்டுகளில், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்து வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்த ஆ.இராசாவின் பரிந்துரையை ஏற்று,
பெரம்பலூர் மாவட்டத்திற்கு கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் (1996-2001) அப்போதைய முதலமைச்சர் கலைஞரால் காவேரி-கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.120 கோடியில் அறிவிக்கப்பட்டு, கொள்ளிடத்தில் இருந்து தண்டாரக்கோறை எனுமிடத்தில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு பூவாளூர், தச்சங்குறிச்சி, சிறுகனூர் வழியாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு வந்து பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட வருட கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

தற்போதைய கணக்கெடுப்பின்படி மக்கள்தொகையின் வளர்ச்சி அதிகமடைந்துள்ளதால், குடிநீர் தேவையும் அதிகரித்துள்ளது. அதனைக் கருத்தில் கொண்டும், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா.எம்.பி கோரிக்கையை வைத்ததை முன்னிட்டும், பெரம்பலூர் நகராட்சிக்கும் , எறையூர் மற்றும் பாடலூரில் அமைந்துள்ள சிப்காட்களுக்கும் சேர்த்து ரூ.366 கோடியில் கொள்ளிடம் காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் ,கே.என்.நேருவை சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில், ஆ.இராசா.எம்.பி., சந்தித்து நன்றி தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!