Rs 37,000 robbery in Perambalur Mystery Persons Handcuffed !!
பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில், சிறுவாச்சூரை சேர்ந்த, வினோத் (37) என்பவர் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் உள்ள சாமியப்பா நகரை சேர்ந்த தவுலத்கான் (58) என்பவர் அரிசி கடையும் நடத்தி வருகின்றனர். அருகில் மளிகை நடத்தி வரும் ராஜசேகர், அவருடைய கடையை இன்று வந்து திறந்த போது, மெடிக்கல் மற்றும் அரிசி கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கடையின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தார். கடைக்கு வந்து பார்த்த போது, மெடிக்கல் கடையில் எதுவும் களவு போகவில்லை. ஆனால், அரிசி கடைக்காரர் வைத்திருந்த ரூ. 37 ஆயிரம் மட்டும் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இது இரு கடைக்காரர்களும் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு, மோப்ப நாய் மற்றும், தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்னர். அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சி வைத்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.