Rs. 49 Lakhs to upgrade Works in Perambalur Duraimngalam Lake: Minister Sivasankar inaugurated.

பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள பெரிய ஏரியில், நீர்வளத்துறையின் சார்பில் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் நீர் தேங்கும் பகுதிகளை மேம்படுத்தும் பணியினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் கற்பகம் தலைமையில் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் 73- ஏரிகளும், 33- அணைக்கட்டுகளும் மற்றும் 5- ஆறுகளும் உள்ளன. பெரம்பலூர் நகரத்தில் இருந்து சுமார் 3 கி.மீ கிழக்கில் திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுறம் மிக அருகில் துறைமங்கலம் பெரிய ஏரி அமைந்துள்ளது.

இந்த ஏரிக்கு இலாடபுரம் பெரிய ஏரி, இலாடபுரம் சிறிய ஏரி, குரும்பலூர் ஏரி, செஞ்சேரி ஏரி, அரணாரை ஏரி, பெரம்பலூர் மேலேரி மற்றும் கீழேரி ஆகிய ஏரிகளிலிருந்து வரத்துவாய்க்காலின் வாயிலாகவும் மற்றும் இதர நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்தும் ஏரிக்கு தண்ணீர் வரப்பெறுகிறது.

துறைமங்கலம் பெரிய ஏரிகரையின் நீளம் 1064 மீட்டர். இந்த ஏரியில் இரண்டு பாசன மதகுகளும் இரண்டு உபரிநீர் வழிந்தோடும் (16.25 மீட்டர், 5.75 மீட்டர் நீளம்) உள்ளது. ஏரியின் கொள்ளளவு 17.22 மில்லியன் கன அடி ஆகும். ஏரியின் பரப்பளவு 48.50 ஹெக்டேர் ஆகும். இரண்டு பாசன மதகுகள் மூலம் 273.80 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

துறைமங்கலம் பெரிய ஏரியானது நகருக்கு மிக அருகாமையில் இருப்பதாலும் தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் இருப்பதாலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நடைபாதையுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதால் நகரின் அழகு கூட்டப்படுவதுடன், ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் ஏரி பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்கும் பொருட்டு இத்திட்டம் மிக இன்றியமையாததாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மேலேரி மற்றும், கீழேரி, துறைமங்கலம், அரணாரை, செஞ்சேரி, குரும்பலூர் ஏரிகள் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் கா.கண்ணபிரான், முன்னாள் எம்.எல்,ஏக்கள் பெரம்பலூர் ராஜ்குமார், வரகூர் துரைசாமி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் என்.ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் ஜெகதீசன், வேப்பூர் யூனியன முன்னாள் சேர்மன் அழகு.நீலமேகம், ஒப்பந்தாரார் தழுதாழை சி.பாஸ்கர் உள்ளிட்ட நகராட்சி கவுன்சிலர்கள் நீர்வளத்துறை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!