Rs.5.18 lakh relief aid for drivers of the family on behalf of Namakkal

தமிழ்நாடு அமைப்புசாரா டிரைவர்கள் நல வாரியத்தின் சார்பில் விபத்தில் இறந்த 7 டிரைவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.5.18 லட்சம் நிவாரண உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஆசியாமரியம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர், விதவை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 440 மனுக்களை வழங்கினார்கள். அந்த மனுக்களை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது வேகமாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

பின்னர், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியத்தின் சார்பில், நல வாரியத்தில் பதிவுபெற்ற டிøர்வர்களின் குடும்பத்தார் 7 பேருக்கு ரூ.5.18 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில், டிஆர்ஓ பழனிசாமி, சமூக பாதுகாப்புத் திட்ட சப் கலெக்டர் துரை, தொழிலாளர் உதவி ஆணையர் (பொ) மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!