Rs. 5 lakh worth of relief goods on behalf of Siruvachur Almighty School! Direct delivery in Chennai today!

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி சார்பாக ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புயல் மழை வெள்ளத்தால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டு முடங்கி போயுள்ளனர். மழை வெள்ளத்தால், பாதிப்படைந்த மக்களுக்கு வழங்க வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டது.

தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கா நிவாரணப்பொருட்கள் சென்னைக்கு சமூக ஆர்வலர்கள், தனியார் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், பணம் படைத்தவர்கள், மனம் படைத்தவர்கள் உதவ வேண்டும் என தாங்களால் முடிந்த உதவிகளை மாவட்ட நிர்வாகங்கள் மூலமாகவும், நேரிடையாகவும் வழங்கி வருகின்றனர்.

இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தன்னார்வலர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபடுமாறு மக்களை நேரடியாக சந்தித்து வழங்க கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி சார்பில், மாணவர்கள், பெற்றோர்கள் உதவியுடன் நிவாரண பொருட்கள் சேகரிக்கபட்டு, சுமார் 600 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அரிசி, பருப்பு, மருந்துகள், போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தயார் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம்.

பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து கொடுப்பதற்காக ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் ஸ்கூல் சேர்மன் ஆ.ராம்குமார், துணைத் தலைவர் மோகனசுந்தரம், செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட 5 பேர் நிவாரணப் பொருட்களை நேற்று வாகனத்தில் ஏற்றி சென்னை சென்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!