Rs.500 per vote: Even though the officials were actively monitoring, 70 percent of the voters in Perambalur constituency were given money day and night! Will the election be postponed?
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி முழுவதும், இன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்களை எழுப்பி விடியலில் ஓட்டு ஒன்று ரூ. 500யை கட்சியினர் பட்டுவாடா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, இதனால் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஓட்டுக்கு ரூ. 300 (வாக்காளர் உரிமைத் தொகை) வழங்கப்படும் நிலையில், பெரம்பலூர் தொகுதியில் , தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் இரவுப் பகலாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஏந்தி சுற்றி வருவதோடு, வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையும் மீறி மாவட்டம் முழுவதும் விடியலில் வீடு வீடாக கதவுகளை தட்டி எழுப்பி வாக்களர் பட்டியல் வைத்து கொண்டு ஓட்டு 500 வீதம் வழங்கினர். படபட என கதவு தட்டும் சத்தம் கேட்ட பொதுமக்கள் எரிச்சலுடன் எழுந்து வந்து வீட்டின் வாசலில் பார்த்த போது கட்சியினர் ரூ.500 ரூபாய் தாள்களை குறிப்பிட்ட சின்னத்தை கூறி வாக்களிக்கமாறு வழங்கி சென்றனர். அதிர்ச்சி அடைந்த வாக்காளர்கள் காலையிலேயே வாங்கி வைத்துக் கொண்டனர்.
இது தொகுதியில் உள்ள 70 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. பல ஊர்களில் அக்கட்சியின் எதிர்கட்சியினர் காட்டி கொடுக்க முன்வராத நிலையில் பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில், தொண்டைமாந்துறை சிவன் கோயில் அருகே ஓட்டுக்கு ரூ.500 வீதம் வழங்கி கொண்டிருந்த தனலட்சுமி சீனிவாசன் பல்கலை கழகத்தை சேர்ந்த இசைஅமுதா என்பவரை தேர்தல் அதிகாரிகள் கைது செய்து, அவரிடம் இருந்து 500 ரூபாய் தாள்கள் 391 யை (ரூ. 1,95,500) கைப்பற்றினர். மேலும், அப்பகுதியில் மாவட்டம் முழுவதும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக ஊழியர்கள் கட்சியினருடன் பட்டுவாடா செய்யப்பட்டிருப்பதை அதிகாரிகள் உறுதி செய்து உள்ளனர். மேலும், எதிர்கட்சிகளும் விடிய விடிய பணப்பட்டுவாடா நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும், நாமும் கொடுக்கத்தான் போகிறோம். அதனால், கண்டும் காணமல் உள்ளனர்.
இறுதி கட்டத்தை தேர்தல் பிரச்சாரம் எட்டி உள்ள நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி பெரும் பரபரப்பாக மாறியுள்ளது. மேலும், பட்டப்பகலிலும் பணப்பட்டுவாடா தைரியமாக நடந்து வருகிறது. அதனால் ஒத்திவைக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
இதே போல பணம் வழங்க எடுத்து சென்ற கொளஞ்சி என்பவரிடம் இருந்து ரூ. 3.30 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.