Rs.64.39 crore funded by social welfare schemes – Perambalur Collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு மக்களுக்கு தேவையான, மக்கள் நலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்றி, செயல்படுத்தி வருகின்றது.

அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் ஏழை, எளிய மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்காக முதியோர் மாதாந்திர உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை, விதவைத்தாய்மார்கள் மாதாந்திர உதவித்தொகை, கைம்பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை என பல்வேறு திட்டங்கள் வகுப்பட்டு அவர;களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் 2017 – 18 ஆம் நிதியாண்டில் வருவாய்த்துறையின் சார்பில் சமூக பாதுகாப்புத் திட்டம் மூலம் முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 5,421 பயனாளிகளுக்கு ரூ.7,03,98,440 – மதிப்பிலான நிதியுதவியும்,

தமிழ்நாடு மாற்றுத்திறனாளி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 3,122 பயனாளிகளுக்கு ரூ.3,88,06,280- மதிப்பிலான நிதியுதவியும்,

கணவனால் கைவிடப்பட்ட உதவித்தொகை திட்டத்தின் கீழ் 1,039 பயனாளிகளுக்கு ரூ.1,29,66,670- மதிப்பிலான நிதியுதவியும், ஆதரவற்ற விதவை உதவித்தொகை திட்டத்தின் கீழ் 7,254 பயனாளிகளுக்கு ரூ.9,04,32,970- மதிப்பிலான நிதியுதவியும்,

இந்திராகாந்தி மாற்றுத்திறனாளி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 474 பயனாளிகளுக்கு ரூ.59,27,650- மதிப்பிலான நிதியுதவியும், இந்திராகாந்தி முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 19,032 பயனாளிகளுக்கு ரூ.24,69,75,460- மதிப்பிலான நிதியுதவியும்,

இந்திராகாந்தி விதவை உதவித்தொகை திட்டத்தின் கீழ் 8,180 பயனாளிகளுக்கு ரூ.10,18,36,100- மதிப்பிலான நிதியுதவியும்,

இலங்கை தமிழர் விதவை உதவித்தொகை திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு ரூ.1,51,410- மதிப்பிலான நிதியுதவியும், இலங்கை தமிழர் முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு ரூ.2,49,260- மதிப்பிலான நிதியுதவியும், இலங்கை மாற்றுத்திறனாளி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.24,720- மதிப்பிலான நிதியுதவியும், முதிர்கன்னி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 203 பயனாளிகளுக்கு ரூ.25,20,410- மதிப்பிலான நிதியுதவியும்,

மேலும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டம் மூலம் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 8,623 பயனாளிகளுக்கு ரூ.2,24,18,500- மதிப்பிலான நிதியுதவியும், உறுப்பினர் திருமணத் திட்டத்தின் கீழ் 1,033 பயனாளிகளுக்கு ரூ.85,88,000- மதிப்பிலான நிதியுதவியும்,

உறுப்பினர் சார்ந்தவர் திருமணத்திட்டத்தின் கீழ் 77 பயனாளிகளுக்கு ரூ.6,36,000- மதிப்பிலான நிதியுதவியும், இயற்கை மரணம் திட்டத்தின் கீழ் 1,360 பயனாளிகளுக்கு ரூ.2,02,65,000- மதிப்பிலான நிதியுதவியும்,

விபத்தால் மரணம் திட்டத்தின் கீழ் 65 பயனாளிகளுக்கு ரூ.65,80,000- மதிப்பிலான நிதியுதவியும், தீவிர நோயினால் பாதிக்கப்பட்டோர் திட்டத்தின் கீழ் 1,139 பயனாளிகளுக்கு ரூ.1,20,24,220- மதிப்பிலான நிதியுதவியும், நலிந்தோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 246 பயனாளிகளுக்கு ரூ.31,72,420- மதிப்பிலான நிதியுதவியும் என மொத்தம் 57,303 பயனாளிகளுக்கு ரூ.64,39,73,510- மதிப்பிலான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!