Rs. 70,000 cash including Dress Metrials Theft of goods valued at 1.70 Lakh
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவரும், பெரம்பலூர் மேட்டுத் தெருவில் வசிப்பவருமான தசரத்சிங் (வயது 46), என்பவர் பெரம்பலூர் கடைவீதியில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 144 ஊரடங்கு உத்தரவின் காரணமாக பூட்டப்பட்ட ஜவுளி கடையை, ஊரடங்கு தளர்வின் காரணமாக இன்று திறப்பதற்காக வந்து பார்த்த போது கடையின் பின்பக்க ஷட்டரில் பூட்டப்பட்டிருந்த இரண்டு பூட்டுகளை மர்ம நபர்கள் சிலர் உடைத்து, ஜவுளி கடைக்குள் புகுந்து 1 லட்ச ரூபாய் மதிப்பிலான புடவைகள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை, கொள்ளையடித்து சென்றது தெரிய வந்ததுள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த தசரத்சிங், திருட்டு சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்தை துப்பறியும் நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் பார்வையிட்டு ஆய்வு செய்து, தடையங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடைவீதியில் கொள்ளை நடந்த சம்பவம் வியாபாரிகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.