Rs 8.5 lakh seized from AIADMK union secretary near Perambalur!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. நாளை இதனால் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தீவிர வாகன தணிக்கை நடந்து வருகிறது.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தில் ஆலத்தூர்கேட் செல்லும் சாலையில் இன்று காலை வேளாண்மை உதவி பொறியாளர் சத்யா தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது, அவ்வழியாக அதே கிராமத்தை சேர்ந்த ஆலத்தூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சசிகுமார் என்பவர் காரை சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட சுமார் ரூ.8.5 லட்சம் பணம் இருந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து பணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் சசிக்குமார், வயலில் விளைந்த வெங்காயத்தை வியாபாரிகளிடம் விற்பனை செய்தற்காக பெறப்பட்ட தொகை என்றும் சில வெங்காய வியாபாரிகளையும் உடன் அழைத்து வந்து தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டார். பின்னர், அதிகாரிகள் தேர்தல் முடிந்த பின்பு வழங்குவதாக தெரிவித்தை அடுத்து சசிக்குமார் புறப்பட்டு சென்றார்.