பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கை:
அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாள் விழா பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் மிக சிறப்பாக நாளை கொண்டாடப்பட உள்ளது. அதன்படி, காலை 9மணி அளவில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தல், பின்னர், மாவட்ட தொழில் நுட்ப பிரிவு சார்பாக துறைமங்கலத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் மாணவர்களுக்கு உணவும், சங்கு திடலில் கொடியேற்றி இனிப்பு வழங்குதல், பின்னர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம சார்பில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்தல், மாவட்ட மாணவரணி சார்பில் செங்குணம் பிரிவுச் சாலை அருகே உள்ள புனித லூயிஸ் முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகளும், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி சார்பில் ஓட்டுனர்களுக்கு சீருடையும், காலை வேளையில், வேப்பந்தட்டை ஒன்றியம் சார்பில் தொண்டைமாந்துறையிலும் , குரும்பலூர் பேரூர் கழகம் சார்பில் குரும்பலூரிலும், பெரம்பலூர் ஒன்றியம் சார்பில் சத்திரமனையிலும், ஆலத்தூர் ஒன்றியம் சார்பில் ஆலத்தூர் கேட் பகுதியிலும், பிற்பகலில் வேப்பூர் ஒன்றியம் சார்பில் எம்.எஸ்.டி மண்டபத்தில் அன்னதான நிகழச்சிகளும், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பில் வேலா முதியோர் இல்லத்திலும், செந்துறை ஒன்றியம் சார்பில் செந்துறை பேருந்து நிலையம் அருகே அன்னதானமும், மாவட்ட அம்மா பேரவை சார்பில் செந்துறை அரசு மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் அன்னதானமும், இலக்கிய அணி சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு உணவும் எவர் சில்வர் தட்டும் மணக்குடையான் கிராமத்தில் வழங்கப்பட உள்ளது.
மேலும் இதைத் தொடர்ந்து நடைபெறும், பொதுகூட்டங்களில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அம்மாவின் பிறந்த நாளை போற்றும் வகையில் நடைபெறுவதால் கழக பொறுப்பாளர்கள் தொண்டர்கள் அனைவரும் அனைத்து நிகழ்ச்சியிலும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமென கேட்டு கொண்டுள்ளார்.