RT Ramachandran MLA Lighting of LED Streetlights worth Rs. 30 lakh near Perambalur.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குன்னம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியின் கீழ் காவல் நிலையம், குன்னம் கூட்டுறவு பால் சங்க வளாகம், பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் ரூ. 30 லட்ச மதிப்பில் எல்.இ.டி பொருத்தப்பட்ட தெருவிளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டன.
அதனை பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ வுமான ஆர்.டிராமச்சந்திரன் மின்சுவிட்சை ஆன் செய்து, ஒளிரச் செய்து தொடங்கி வைத்தார். இதனால், இரவு நேரங்களில் பயணிக்கும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பயன் பெறுவர்.
இந்நிகழ்வின் போது பெரம்பலூர் மாவட்ட ஜெ.பேரவை பொறுப்பாளரும், குன்னம் பால் கூட்டுறவு சங்க தலைவருமான குன்னம் சி.குணசீலன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் இளங்கோவன் (குன்னம்), நாகராஜன் (சித்தளி), கிளைசெயலாளர் ராஜா, ஊராட்சி எழுத்தர் ராஜா, ஒப்பந்ததாரார் தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.