இது குறித்து மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் மேலும் தெரிவித்துள்ளதாவது:
அரசு ஆணை (நிலை) எண் 143 கூட்டுறவு உணவு மற்றும் நுகா;வோh; பாதுகாப்புத்(எப்1)துறை நாள்: 06.10.2010-இன்படி பொது விநியோகத்திட்டத்தின் செயல்பாட்டிலும், நியாய விலைக்கடைகளின் செயல்பாட்டிலும் வெளிப்படையான முறையை கொண்டுவரும் வகையில் நியாய விலைக்கடைகளின் பதிவேட்டினை சமூக தணிக்கைக்கு உட்படுத்த ஆணையிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராம புறங்களில் செயல்படும் நியாய விலை கடைகளின் கணக்குகளை 26.01.2016 அன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் சமூக தணிக்கைக்காக பொதுமக்கள் முன்பு வைக்கப்படும். எனவே பொதுமக்கள் 26.01.2016 அன்று நடைபெற உள்ள கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.