Rural Development and Local Government Employees Union demonstrated in Namakkal
நாமக்கல்லில் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் பார்க் ரோட்டில் நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் வேலுச்சாமி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.
இதில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமார பாளையம், பள்ளிபாளையம் உள்ளிட்ட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் ஒப்பந்த, தினக்கூலி, சுய உதவிக்குழு துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சி நிர்வாக கமிஷனர் உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். அதை நிலுவைத்தொகையுடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் சிங்காரம், மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.