Rural development department officials took action due to public protest near Perambalur for drinking water!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட வ.கீரனூர் உள்ளது. இக்கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்சனை குறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடமும், பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், ஆளும் கட்சியின் கூட்டணி கட்சியை சேர்ந்த விசிக உள்ளிட்ட கட்சியினர் முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் உள்ளிட்டோர் நேற்று காலை சுமார் 9 மணி அளவில் அரியலூர் – அகரம்சிகூர் சாலையில் மறியல் போரட்டம் சுமார் 3 மணி நடத்தினர். அங்கு சென்ற காவல் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தன் பேரில் கலைந்து சென்றனர்.

மக்கள் அடிப்படை பிரச்சனை களைய வராத அதிகாரிகளை கண்டித்து நேற்று மக்கள் நடத்திய போராட்டத்திற்கு எதிரொலியாக இன்று அந்த ஊரில் குடிநீர் பைப் லைனில்,

முறையற்ற வகையில் சிலர் 50 குடிநீர் இணைப்புகள் அமைத்து பயன்படுத்தி வந்ததால் அப்பகுதியில் இறுதிவரை குடிநீர் சரிவர செல்லாமல் இருந்தது கள ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளதாகவும்,

குடிநீர் குழாய் அமைத்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் முறையற்ற குடிநீர் இணைப்புகளை துண்டிப்பதில் சிரமம் இருப்பதாகவும், அப்பகுதியில் இறுதிவரை குடிநீர் செல்லும் பொருட்டு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஜி.ஐ பைப் லைன் அமைத்து குடிநீர் வழங்கும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருவதாகவும்,

. இந்த பணி நாளைக்குள் முடித்து மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், . தற்காலிமாக குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும், அப்பகுதியில் எரியாமல் இருந்த தெரு விளக்குகள் இன்று சரிசெய்யப்பட்டுள்ளது என்றும் வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

மக்கள் போராட்டத்திற்கு பிறகு இந்த நடவடிக்கை சம்பவம் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சுகந்திரம் கிடைந்து சுமார் 75 ஆண்டுகளை கடந்தும் குடிநீருக்கும், தெருவிளக்கிற்கும் மக்கள் போராடும் சம்பவம் கிராம மக்கள் எந்த அளவிற்கு சிரமத்தில் உள்ளனர் என்பதை காட்டுகிறது.

பின்குறிப்பு:

ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு என்ன செய்தால் நன்றாக இருக்கும் என்பதை விட்டு விட்டு, எந்த வேலையை முடித்தால் அதிகளவு கட்டிங் கிட்டும் என தினந்தோறும் செயல்பட்டதன் விளைவே மக்கள் போராட்டம். அதோடு, ஆளும் கட்சி திமுவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் ஒருவர் கூட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கமிசன் அதிகமாக கேட்பதை கண்டித்து ஆலத்தூர் யூனியன் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினார்.
ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் பக்கத்து மாவட்டத்தில் சுமார் 15 கோடியில் வீடு கட்டுவதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. ஆனால், ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒரு பலத்த ஆதரவு தெரிவிப்பதால் வேறு இடத்திற்கு பணி மாறுதல் உத்தரவாகியும் இன்னமும் பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!