Rural purity & Rural Welfare Movement Project chariot procession two weeks: Collector inaugurated.

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் துவங்கப்பட்ட இரத ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் தலைவர் வே.சாந்தா இன்று மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து தொடங்கி வைத்தார்.

கிராம தூய்மை மற்றும் கிராம நல வாழ்வு இருவார இயக்கத்தில் மிஷன் அந்தியோதயா திட்டம், கிராம ஊராட்சிகளில் வாழ்வாதார தேவைகள், படித்த இளைஞர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் தொடர்பான இரத ஊர்வலம் தீன் தயாள் உபத்யாய கிராமீன் கௌசல்யா யோஜனா, கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி திட்டம், கவுசல் பஞ்ச் ஆகிய மூன்று திட்டங்களின் கீழ் நடத்தப்படும் பயிற்சிகளுக்கு இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இரத ஊர்வலம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ள படித்த இளைஞர்கள் கவுசல் பஞ்ச் திட்டத்தில் http://www.kaushalpanjee.nic.in இணையதளத்திலும், கைபேசி செயலியில் kaushal panjee -ஐ பதிவிறக்கம் செய்து கொண்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள பயனாளியின் சுய விவரங்களை பதிவு செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் எஸ். உமாமகேஸ்வரி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உதவித் திட்ட அலுவலர் ச. துர்காசெல்வி, உதவித் திட்ட அலுவலர்கள் எஸ். மணிமேகலை, பெ. வெங்கடேசன், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கம் மேலாளர் இரா.சங்கர் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!