Sale of fertilizers at old prices: Perambalur District Cooperative Societies Announcement
பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பொpயசாமி விடுத்துள்ள தகவல் :
சமீப காலமாக உரம் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக உரங்களின் விலையை கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் அனைத்து உர நிறுவனங்களும் உயர்த்தியுள்ளன. இந்நிலையில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் “டான்பெட்” மூலமாக வழங்கப்பட்டு, தற்போது இருப்பில் உள்ள யூரியா, டிஏபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் பழைய விலையிலேயே விற்கப்படுகின்றன.
அதன்படி, டிஏபி 50 கிலோ அளவு கொண்ட ஒரு மூட்டையின் புதிய விற்பனை விலையான ரூ.1,340- க்கு பதில் பழைய விலையான ரூ.1,290- எனவும்,
யூரியா 45 கிலோ அளவு கொண்ட ஒரு மூட்டையின் பழைய விலை ரூ.266.50- லிருந்து மாற்றம் இல்லாமல் அதே விலையிலும்,
10:26:26 50 கிலோ அளவு ஒரு மூட்டையின் புதிய விற்பனை விலை ரூ.1,280- க்கு பதில் பழைய விலையான ரூ.1,160- எனவும்,
20:20:0:13 50 கிலோ அளவு ஒரு மூட்டையின் புதிய விற்பனை விலை ரூ.1,015- க்கு பதில் பழைய விலை ரூ.950- எனவும் விற்பனை செய்ப்படுகிறது.
எனவே, தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை பழைய விலையில் வாங்கி பயனடைய கேட்டுக் கொண்டுள்ளார்.