Sample Process Explanation to the Public with the tool to confirm voting in the machine: Perambalur Collector Information!

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 வருகின்ற 06.04.2021 அன்று நடைபெற உள்ளது. அதன்படி தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 20.01.2021 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலானது 01.11.2020 ஆம் தேதி முதல் 15.12.2020 ஆம் தேதி வரை வரப்பெற்ற விண்ணப்பங்களை ஒருங்கிணைத்து வெளியிடப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5,75,986 வாக்காளர்கள் உள்ளனர்.

அதனடிப்படையில் 147-தனி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 1,47,320 ஆண் வாக்காளர்களும், 1,54,950 பெண் வாக்காளர்கள் 21 இதர வாக்களார்கள் என மொத்தம் 3,02,291 வாக்காளர்களும் 148-குன்னம் சட்டமன்ற தொகுதியில் 1,35,240 ஆண் வாக்காளர்களும் 1,38,442 பெண் வாக்காளர்களும் 13 இதர வாக்களார்கள் என மொத்தம் 2,73,695 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, பெரம்பலூர் தொகுதியில் 428, குன்னம் தொகுதியில் 388 என மொத்தம் 816 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021இல் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவி இணைத்து பயன்படுத்தப்பட உள்ளது. எனவே “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்” மற்றும் ‘வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவியின் செயல்பாடு மற்றும் நம்பகத்தன்மை குறித்து வாக்காளர்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு இயந்திரத்துடன் வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவி இணைத்து பயன்படுத்துவது தொடர்பாகவும் பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கம் காண்பிக்கப்படவுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வருகின்ற தோதலில் வாக்களிப்பது குறித்த வாக்காளர் விழிப்புணர்வு அரங்கம் அமைக்கப்பட்டு அதன்மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம் மற்றும் கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு அரங்கம் அமைத்து அதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் (நுஏஆள) வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவி ஆகியவைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. அதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் (நுஏஆள) வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவி ஆகியவை ஒரு தொகுதியில் உள்ள மொத்த வாக்குச்சாவடி எண்ணிக்கையில் 5 சதவீதம் என்ற அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு தலா 30 என மொத்தம் 60 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 60 வாக்கினை உறுதி செய்யும் கருவியும், 60 கட்டுப்பாட்டு கருவிகளும் விழிப்புணாவு நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்படவுள்ளன. இந்த இயந்திரங்கள் அனைத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். தேர்தல் நாள் அன்று வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட மாட்டாது.

தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை பொதுமக்கள் கருத்தில் கொண்டு வருகின்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களித்து தங்களது வாக்குரிமையை நிலைநாட்ட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!