Satyasayibah’s 93rd Birthday Celebration in Namakkal
நாமக்கல்லில் சத்யசாயிபாபா 93வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நாமக்கல் ஸ்ரீ சத்யசாயி சேவா நிறுவங்கள் சார்பில் சத்யசாயிபாபா 93வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.விழாவினை முன்னிட்டு கடந்த 21ம் தேதி 108 காயத்ரி மந்திரமும், 22ம் தேதி 1008ஸஹஸ்ரநாம அர்ச்சனையும் சுப்பிரமணியம் டிரைவிங் பள்ளியில் நடைபெற்றது.
23ம் தேதி காலை மாருதிநகர் விநாயகர் கோவிலில் ஓம்காரம், சுப்பிரபாதம் மற்றும் நகர சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை சிறப்பு சாயி பஜனை, மகா மங்கள ஆரத்தி நடைபெற்றது.
24ம் தேதி அரசு மருத்துவமனையில் சத்யசாய்பாபா பிறந்த நாள் அன்று நாமக்கல் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு வஸ்திரம் பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.
25ம் தேதி காலை நராயண சேவையும், மாலை சாயி பஜனையும் மற்றும் மகாமங்கள ஆரத்தியும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை நாமக்கல் ஸ்ரீசத்யசாயி சேவா நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.