Scholarships for BC, MBC, DNT students; Perambalur Collector Information

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட (பிவ) , மிகப்பிற்படுத்தப்பட்டோர் (மிபவ) மற்றும் சீர்மரபினர் (சீம) மாணவ/மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிவ/மிபவ/சீம மாணவ/மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

நடப்பாண்டில் புதியது மாணாக்கர்கள் https://ssp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் Student Login – இல் சென்று ஆதார் எண் அளித்து e-KYC Verification செய்ய வேண்டும். கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship Portal) மூலம் புதியதிற்காக விண்ணப்பிக்கும் மாணாக்கர்கள் 29.02.2024-க்குள் இணையதளம் மூலம் சமர்ப்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அனுகலாம், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!