School girl hangs herself near Perambalur!
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே வயிற்று வலி காரணமாக பள்ளி மாணவி நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் பூஜா (15). இவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவரது தாய் நீலா அவருடைய தங்கை வீட்டிற்கு சென்று விட்டு இரவு 10 மணிக்கு வந்த போது பூஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுதகவலின் பேரில் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.