School student commits suicide near Perambalur!
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூரை சேர்ந்த செந்தில்குமார் விவசாயம் வேலை செய்து வருகிறார். மகன் மகிழன், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை தீடிரென தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே அதே பள்ளியில் பயின்ற மாணவன் ஒருவர் தற்கொலை செய்து இறந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதே பள்ளியில் தற்போது மற்றொரு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு உரிய முறையில் புரியும் வண்ணம், பாடங்களை நடத்த வேண்டும், அதே போல், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், உரிய கவுன்சிலிங் வழங்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்நோக்குகின்றனர். பெற்றோர்களும், உரிய முறையில் தங்கள் குழந்தைகளுடன் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதோடு, உரிய வழிகாட்டல்களை எடுத்துரைப்பது சிறந்தது. மாணவன் தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.