Scooter with Government subsidy: Call to apply for Working women in Namakkal

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் 2018-2019 ஆம் நிதியாண்டில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டர் அரசு மானியத்துடன் வழங்கப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவம் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராகவும், அதற்கான ஓட்டுனர் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஏற்கெனவே இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த தகுதியுடையோர் மீண்டும் விண்ணப்பிக்க தேவை இல்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களை இணைத்து, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் வருகிற 18-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது விரைவு மற்றும் பதிவு அஞ்சல் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்