Sealed 2 shops selling Gutka in Perambalur: Officials take action!

தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடத்தல் மூலம் விற்பனை கள்ளத்தனமாக நடந்து வருகிறது. பான்பராக், குட்கா உபயோகப்படுத்துபவர்களுக்கு, புற்றுநோய், நரம்பு தளர்ச்சி, ஆண்மைக்குறைவு உள்ளிட்ட பல விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் தடை செய்யப்பட்டுள்ளது.

கள்ளத்தனமாக குட்கா விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி .ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் மாவட்டம் முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் உள்ள கடைகள் மற்றும் குடோன்களில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்..

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், கடைவீதி, புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றில் உள்ள கடைகளில் திடீர் சோதனையை போலீஸ் எஸ்.பி .ச.ஷ்யாம்ளா தேவி நேரடி சோதனை நடத்தினார்.

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் கள்ளத்தனமான மது விற்பனை, காய்ச்சுதல் மற்றும் ஊறல் போடுதல் ஆகிய செயல்களில் ஈடுபடும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம் எனவும், தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என்றும் எஸ்.பி தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் போலீசாருடன் பெரம்பலூர் நகரில் மேற்கொண்ட திடீர் சோதனையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள பிரபாகரன் என்பவரது பெட்டிக்கடையில் 22 குட்கா பாக்கெட்டுகளும், எளம்பலூர் எம்ஜிஆர் நகரில் உள்ள இளங்கோவன் என்பவரது பெட்டிக்கடையில் 30 குட்கா பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்து, இரு கடைகளுக்கும் சீல் வைத்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!