Sealed in the room where the voting machines used for the Perambalur, Kunnam Assembly elections were kept!

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சட்டமன்ற பொதுத் தேர்தல்-2021 நேற்று, காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடைபெற்றது. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 9 வேட்பாளர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 22 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 816 இடங்களில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வத்துடனும், அமைதியாகவும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து வாக்கு இயந்திரங்கள் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு 40 மண்டல அலுவலர்கள் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு 35 மண்டல அலுவலர்கள் தலைமையில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு வேப்பூர்அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கும், வாகனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டது.

147.பெரம்பலூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் 1,11,012 (75.30 சதவீத) ஆண் வாக்காளர்களும் 1,25,691 (80.97 சதவீத) பெண் வாக்காளர்களும், 4 இதரர் என மொத்தம் 2,36,707 (78.20 சதவீத) வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

148.குன்னம் சட்டமன்ற தொகுதியில் 1,01,553 (75.17 சதவீத) ஆண் வாக்காளர்களும் 1,17,362 (84.83 சதவீத) பெண் வாக்காளர்களும், 1 இதரர் என மொத்தம் 2,18,916 (80.05 சதவீத) வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,12,565 (75.23 சதவீத) ஆண் வாக்காளர்களும் 2,43,053 (82.9 சதவீத) பெண் வாக்காளர்களும், 5 (14.28 சதவீத) இதரர் என மொத்தம் 4,55,623 (79.12 சதவீத) வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

இந்த தேர்தலின்போது, 147.பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 428 வாக்குச்சாவடி மையங்களுக்கு 428 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 428 கட்டுப்பாட்டு கருவிகளும், 428 வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களும், 148.குன்னம் சட்டமன்ற தொகுதியில் 388 வாக்குச்சாவடி மையங்களுக்கு 776 (ஒரு வாக்குப்பதிவு மையத்திற்கு 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வீதம்) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 388 கட்டுப்பாட்டு கருவிகளும், 388 வாக்கினை சரிபார்க்கும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டது.

147.பெரம்பலூh;(தனி) சட்டமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களாக கண்டறியப்பட்ட 39 இடங்களிலும் 148.குன்னம் சட்டமன்ற தொகுதியில் 38 இடங்களிலும் மத்திய அரசு பணியில் உள்ள 1 அலுவலர் வீதம் 77 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 193 வெப் கேமராவும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 223 வெப் கேமரா என மொத்தம் 416 வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு பதிவு மையங்கள் கண்காணிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 428 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களும், 428 வாக்குப்பதிவு நிலை-1 அலுவலர்கள், 428 வாக்குப்பதிவு நிலை-2 அலுவலர்களும், 428 வாக்குப்பதிவு நிலை-3 அலுவலர்களும், என மொத்தம் 1,712 அலுவலர்கள் பணியாற்றினர்.

குன்னம் சட்டமன்ற தொகுதியில் 388 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களும், 388 வாக்குப்பதிவு நிலை-1 அலுவலர்கள், 388 வாக்குப்பதிவு நிலை-2 அலுவலர்களும், 388 வாக்குப்பதிவு நிலை-3 அலுவலர்களும், என மொத்தம் 1,552 அலுவலர்கள் பணியாற்றினர்.

பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் 816 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களும், 816 வாக்குப்பதிவு நிலை-1 அலுவலர்கள், 816 வாக்குப்பதிவு நிலை-2 அலுவலர்களும், 816 வாக்குப்பதிவு நிலை-3 அலுவலர்களும், என மொத்தம் 3,264 அலுவலர்கள் பணியாற்றினர்.

147.பெரம்பலூர; சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 103 சிசிடிவி கண்காணிப்பு கேமரா மூலமும், 148.குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 90 சிசிடிவி கண்காணிப்பு கேமரா மூலமும், என மொத்தம் 193 சிசடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுப்பார்வையாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்களின் முன்பாக வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை மூடி முத்திரையிடப்பட்டது .

வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் தலா 2 மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 2 துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 3 ஆய்வாளர்கள், 15 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 21 காவலர்கள், 39 ஆயுத படை காவலர்கள், 24 இந்திய திபெத்திய பாதுகாப்பு படையினர், 40 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர்கள் என மொத்தம் 284 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!