Sealing of shops built occupying temple space near Perambalur

பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் உள்ள செல்வ விநாயகர் கோயிலுக்கு சொந்தமாக 4 கடைகள் உள்ளது. இந்த கடைகளை அதே ஊரைச் சேர்ந்த கதிர்வேல், கலைமணி மற்றும் அக்பர் பாஷா ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை நடத்தி வந்துள்ளனர். கடைகளை காலி செய்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மேற்படி கடைகளை காலி செய்ய நீதிமன்றம் உத்திரவிட்டது. நீதிமன்ற உத்திரவுபடி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டும் கடைகளை காலிசெய்யவில்லை. எனவே, இந்து சமய உதவி ஆணையர் கருணாநிதி தலைமையில் செயல் அலுவலர் அகிலா, சிறுவாச்சூர் செயல் அலுவலர் அருண்பாண்டியன், செட்டிகுளம் செயல் அலுவலர் யுவராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் மேற்படி கடைகளை பூட்டி சீல் வைத்தனர். மங்களமேடு போலீஸ் டிஎஸ்பி தேவராஜ், இன்ஸ்பெக்டர் கலா ஆகியோர் தலைமையிலான போலிசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இதன் முலம் சந்தை மதிப்பில் சுமார் 26 லட்சம் ருபாய் மதிப்பிலான சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருநது மீட்கப்பட்டன.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!