Seed festival in school by All India Builders Association, Perambalur Centre!
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், அகில இந்திய கட்டுநர் சங்கம், பெரம்பலூர் மையம் சார்பில் வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விதைத் திருவிழா நேற்று நடத்தப்பட்டது.
பெரம்பலூர் கட்டுநர் மைய தலைவர் தர்மராஜ், செயலாளர் ஜோதிவேல், பொருளாளர் ரவிக்குமார், மாநிலத் திறன் மேம்பாட்டு குழு தலைவர் ராஜாராம், பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அகில இந்திய கட்டுநர் சங் உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.