seeks covering the siege protest on behalf of the TVK party to life toll: 125 people arrested

பெரம்பலூர் மாவட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமாந்துறை சுங்க சாவடியை நிரந்தரமாக முடக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்திய 125 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுங்கசாவடிகளையும் முடக்கோரி டோல்கேட் முற்றுகை போராட்டம் நடத்துவது என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்து இருந்தார். அதன்படி பெரம்பலூர் மாவடட்டத்தில் உள்ள திருமாந்துறை சுங்கசாவடியை நிரந்தரமாக முடக்கோரி கட்சியின் சார்பில் டோல்கேட் முற்றுகை போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு கடலூர் மாவட்ட செயலாளர் சின்னதுரை தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் ஆர். டி. ராஜன், அரியலூர் மாவட்ட செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் ரெங்க சுரேந்தர், வெங்கடாசலம், ராகவன், நகர செயலாளர்கள் சேகர், மருத.சீனிவாசன், மகளிர் அணியை சேர்ந்த கற்பகம், ஜெயா உட்பட 125க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

மங்களமேடு காவல் நிலையத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கைது செய்து பெரம்பலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!