Seminar for Young Entrepreneurs at Namakkal Government Women’s College

நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் இளம் தொழில் முனைவோருக்கான கருத்தங்கம் நடைபெற்றது.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி வணிகவியல் துறை சார்பில் உலக அளவில் இளம் தொழில் முனைவோருக்கான சவால்களும், வாய்ப்புகளும் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் சுகுணா தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் சுபத்ரா வரவேற்றார்.
கருத்தரங்கில் ஸ்ரீலங்கா தென் கிழக்கு பல்கலைக்கழக வணிக மேலாண்மை பேராசிரியர் இஸ்மாயில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உலக அளவில் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் பற்றியும் அவற்றில் உள்ள சவால்கள் இளைய தலைமுறையினர் எவ்வாறு சந்திக்க வேண்டும் என்பது குறித்து பேசினார்.
இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் உதவி பேராசிரியர் செல்வராஜூ நன்றி கூறினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர் சுபத்ரா, பேராசிரியர்கள் மற்றும் வணிகவியல் மன்ற பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.