Senior Citizens, Disabled People Can Vote From Home: Perambalur Constituency Election Officer Information!

மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களில் விருப்பமுள்ளவர்கள் வீட்டில் இருந்தே தபால் வாக்கு மூலம் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 19.04.2024 அன்று நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

100 சதவீத வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையிலும்,வாக்காளர்கள் எந்த வகையிலும் சிரமமின்றி வாக்களிக்கவும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் மூத்த குடிமக்களான 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களில் விருப்பமுள்ளவர்கள் வீட்டில் இருந்தே தபால் வாக்கு மூலம் தங்களது வாக்கை செலுத்த இந்திய தேர்தல் ஆணையம் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கே வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சென்று படிவம் 12 – D யை 19.03.2024 முதல் வழங்க உள்ளார்கள். இதில் தபால் வாக்கு செலுத்த விருப்பம் உள்ளவர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பப்பெற்று 25.3.2204க்குள் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 6,323 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 85 வயதிற்கு மேல் 3,981 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் இந்த வாய்ப்பினை தகுதியுடைய வாக்காளர்கள் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தபால் வாக்கு செலுத்த விரும்பாத நபர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் வந்து வாக்களிக்களாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!