Senthamangalam MLA Chandrasekaran Home wedding ceremony: Chief Minister EPS greeted in person!
சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் இல்லத்திருமணவிழாவில் தமிழக முதல் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணக்களை வாழ்த்தினார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டசபைத் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக பணியாற்றி வருபவர் சந்திரசேகரன். இவர் கொல்லிமலை ஒன்றிய அதிமுக செயலாளராகவும் உள்ளார். இவரது மகன் ரஞ்சித்திற்கும், தீபாவிற்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இதையொட்டி திருமண வரவேற்பு விழா நாமக்கல் லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. எம்எல்ஏ சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்றார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணக்களை வாழ்த்தினார்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, கல்வி அமைச்சர் செங்கோட்டையன், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு தமிழக அமைச்சர்கள், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம், போலீஸ் எஸ்.பி அருளரசு, நாமக்கல் எம்.பி சுந்தரம், எம்எல்ஏ பாஸ்கர், திருச்செங்கோடு எம்எல்ஏ பொன்சரஸ்வதி மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அதிமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள், திரளான பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டு மணக்களை வாழ்த்தினார்கள்.