Sep-Oct 2017 may apply under the Higher Secondary Exam for Private : Perambalur Ceo

பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள செப்டம்பர் – அக்டோபர் 2017 மேல்நிலைத் (இரண்டாம் ஆண்டு) துணைத் தேர்வெழுத இவ்வலுவலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க இயலாமல், தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் இத்துறையால் நடத்தப்பட்ட பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வெழுதியோர், தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். (H வகையினர்) பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டு இடைவெளி இருக்கவேண்டும். 01.10.2017 அன்று 161 2 வயதும் பூர்த்தி அடைந்தவர்கள் நேரடித் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம். (HP வகையினர்) தட்கலில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் சென்னையில் மட்டுமே தேர்வெழுத இயலும். விண்ணப்பிக்க விரும்பும் ஆண் தனித்தோ;வா;கள் பெரம்பலுhர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பெண் தனித்தேர்வர்கள் பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் 08.09.2017 மற்றும் 09.09.2017 ஆகிய இரு நாட்களில் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மறுமுறை தேர்வெழுதுவோர் (H வகை தனித்தேர்வர்கள்) ஒவ்வொரு பாடத்திற்கும், ரூ.50- வீதம் தேர்வுக் கட்டணமும், அதனுடன் இதரக்கட்டணமாக ரூ.35- ம் செலுத்த வேண்டும். கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1000-, ஆன்-லைன் பதிவுக்கட்டணம் ரூ.50- செலுத்தவேண்டும். நேரடித் தனித்தேர்வர்கள் (HPவகை தனித்தேர்வர்கள்) தேர்வுக் கட்டணம் ரூ.150- இதரக் கட்டணம் ரூ.35-இ கேட்டல், பேசுதல் திறன் தேர்வு ரூ.2- என மொத்தம் ரூ.187- செலுத்த வேண்டும்.

கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1000- தேர்வுக் கட்டணம், சிறப்பு அனுமதி கட்டணம் மற்றும் ஆன்-லைன் பதிவுக்கட்டணத்தினை ரூ.50- பணமாக செலுத்த வேண்டும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!