Set via Perambalur to Salem railway, in the resolution of the Executive Council of the PMK in Perambalur
பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் பெரம்பலூர் பாலக்கரை அருகே நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் உலக. சாமிதுரை தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராம.மருதவேல் வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர்கள் அனுக்கூர் ராஜேந்திரன், மதுரா செல்வராஜ், கண்ணபிரான் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் தங்கதுரை, மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்புச்செல்வன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் திருமாவளவன், அரியலூர் மாவட்ட செயலகம் ஜெயங்கொண்டம் ஒன்றிய குழு தலைவருமான காடுவெட்டி ரவி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகக் குழு தலைவர் ராஜாதிராஜா, ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்
கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாசை குன்னம் சட்டமன்ற தொகுதியில் அமைக்க உள்ள தம்பிகள் தங்கைகள் மக்கள் படைகள் கூட்டத்திற்கு வரவழைத்து கூட்டத்தை நடத்துவது, சிதம்பரத்திலிருந்து அரியலூர் பெரம்பலூர் ஆத்தூர் வழியாக சேலம் வரை ரயில் பாதை அமைத்திட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துவது, குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செந்துறை ஒன்றியத்தில் உள்ள வெள்ளாற்றில் ஏழை தொழிலாளர்கள் மாட்டுவண்டியில் மணல் எடுக்க வசதியாக மணல் குவாரி அமைக்க தமிழக அரசு கேட்டுக் கொள்வது,
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் முந்திரி விளைச்சல் அதிகம் உள்ளதால் அப்பகுதியில் மூஞ்சில தொழிற்சாலை அமைத்து முந்திரி ஏற்றுமதி செய்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுவது,
செந்துறை பகுதியில் ஏழை எளிய மாணவ மாணவிகள் நலன் கருதி அரசு கல்லூரி அமைக்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வட்டார பகுதியில் அதிகமாக விளையும் மக்காச்சோளம் பருத்தி ஆகியவற்றை கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையங்கள் அமைத்து விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைத்திட நடவடிக்கை எடுக்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பெரம்பலூர் வேப்பந்தட்டை வேப்பூர் ஆலத்தூர் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் நகர செயலாளர் வெங்கடேசன் நன்றி தெரிவித்தார்.