Sewage-mixed drinking water in Perambalur: People involved in road blockade argue with officials! 10 people arrested!

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் 21 வது வார்டு பகுதியில், 1800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

வாரத்திற்கு ஒரு முறை இவர்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே காவிரி குடிநீர் வழங்கப்படுவதாகவும், அவ்வாறு வழங்கப்படும் குடிநீர் சுகாதாரமற்ற முறையில் கழிவு நீர் கலந்து வருவதாகவும், குற்றம் சாட்டி அப்பகுதி பொது மக்கள் நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடமும் பலமுறை புகார் தெரிவித்தும், சுகாதாரமாகவும், தட்டுப்பாடு இன்றியும் குடிநீர் வழங்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 21வது வார்டு அதிமுக நகராட்சி கவுன்சிலர் பழனிச்சாமி தலைமையில் பாலக்கரை துறைமங்கலம் சாலையில் பங்களா பஸ் ஸ்டாப் என்ற இடத்தில், கற்களையும், மரக்கட்டைகளையும், இருசக்கர வாகனங்களையும், தள்ளுவண்டிகளையும், சாலையின் நடுவே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட நகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட பொது மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகளின் சமாதான பேச்சு வார்த்தையை ஏற்று போராட்டத்தை கைவிட மறுத்த வார்டு கவுன்சிலர் பழனிச்சாமி உள்ளிட்ட பொது மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே போன்ற போராட்டத்தின் போது, முறையாக குடிநீர் வழங்குவதாக உறுதியளித்து சென்ற நிலையில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என வேதனை தெரிவித்து, சாக்கடை கலந்த இந்த நீரை நீங்கள் பருகுவீர்களா? என கேள்வி எழுப்பி கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது, இதனைடுத்து இதனால் அதிமுக கவுன்சிலர் பழனிச்சாமி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோரை பெரம்பலூர் போலீசார் கைது செய்து, தனியார் திருமணம் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீர் கேட்டு போராடினால் போலீசார் அடக்கு முறையை கையாள்வதாகவும், அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கையை அலட்சியப்படுத்துவதாகவும் கோஷம் எழுப்பிய வாரே அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட பொதுமக்கள் கைதாகி சென்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!