பெரம்பலூர் அருகே நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றிக்கு பாடுபட வேண்டும் என வேப்பந்தட்டை ஒன்றிய அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேப்பந்தட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் பேசியபோது எடுத்தப்படம்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றிய அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.
ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் வரவேற்று பேசினார். அவைத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார்.
குன்னம் சட்ட மன்ற உறுப்பினரும் அதிமுகவின் பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான ஆர்.டி. ராமச்சந்திரன், பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
கூட்டத்தில் வருகின்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஒவ்வொரு கிளை நிர்வாகிகளிடமும் கருத்துகள் கேட்டு வேட்பாளர்கள் தேர்வு செய்வது, அ.தி.மு.க சார்பில் நிறுத்தப்பட கூடிய வேட்பாளர்கள் அனைவரையும் 100 சதவீத வெற்றி பெற செய்ய அனைத்து நிர்வாகிகளும் பாடுபட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் துரை, அமைப்பு சாரா ஓட்டுனரணி மாவட்ட செயலாளர் முத்துசாமி, பசும்பலூர்; ஒன்றியக்குழு உறுப்பினர் லதாராஜேந்திரன், மாவட்ட பேரவை செயலாளர் கார்த்திகேயன், ஒன்றியக்குழு தலைவர் ஜெயலெட்சுமி-கனகராஜ், துணை தலைவர் வேலுசாமி, ஒன்றிய பேரவை அவைத் தலைவர் சுந்தரராசு மற்றும் பெரும் திரளான அ.தி.மு.க வினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி கழக செயலாளர் குழந்தைவேல் நன்றி கூறினார்.
[Should strive to win 100 percent of local council elections: veppantattai AIADMK activists resolution passed at the Union]