Shouting demonstration in Perambalur demanding to abandon smart meter project!

மின் விநியோகத்தை தனியார்மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட, பெரம்பலூர் மின்வாரிய உபகோட்ட அலுவலகம் முன்பு ஒலி முழக்க ஆர்ப்பாட்டம். மாநில செயலாளர் அகஸ்டின் தலைமையில் நடைப்பெற்றது.

தனியார் மயத்திற்கான ஸ்மார்ட் மீட்டர் செலவை மின்வாரியத்தின் தலையில் சுமத்தாதே, ஒரே வீதியில் பல தனியார் நிறுவனங்கள் மின்சார வியாபாரம் செய்ய ஸ்மார்ட் மீட்டர் பொருத்தாதே, உச்சபட்ச பயன்பாடு நேரத்தில் கூடுதல் மின் கட்டணத்தை வசூலிக்க ஸ்மார்ட் மீட்டர் பொருத்தாதே, ஸ்மார்ட் மீட்டர்-ஐ பொருத்துவதற்காக தற்போது மின் இணைப்பில் உள்ள தரமான எலக்ட்ரானிக் மீட்டர்களை குப்பை தொட்டியில் போடாதே, கணக்கீட்டு பிரிவு, களப்பிரிவு ஊழியர்களின் வேலைபளு ஒப்பந்தத்தில் உள்ள பதவிகளை கபளீகரம் செய்யும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுக் கோரியும், மத்திய அரசே, Smart Meter-ஐ பொருத்தி அதன் பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்க மாநில அரசுகளை நிர்பந்திக்காதே, வேலைபளு ஒப்பந்த பதவிகளை ரத்து செய்வதற்குமுன் 9A நோட்டீஸ் வழங்கி பேச்சுவார்த்தை நடத்தக் கோரியும்,படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் வேலை வாய்ப்பு கனவை பறிக்காதே என ஒலி முழக்க போராட்டத்தில் கோசங்களை எழுப்பினர்.

வட்ட செயலாளர் பன்னீர்செல்வம், தினேஷ், பெஞ்சமின் , ராஜு கலந்துகொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!