Since the start of the monsoon lake, tanks gather rain water demand raised by VCK, Perambalur District Committee meeting resolution passed
பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட செயலாளர் சி.தமிழ்மாணிக்கம், தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் சி.பாஸ்கர் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் கலையரசன், மாவட்ட துணைச் செயலாளர் ந.கிருஷ்ணகுமார், சட்ட மன்ற தொகுதி செயலாளர்கள் ம.க.ச. ரத்தினவேல் (பெரம்பலூர்), மா.கவியரசன் (குன்னம்) செந்துறை ஒன்றிய செயலாளர் க.பாலசிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரம்பலூர், கரூர் மண்டல அமைப்பு செயலாளர் இரா.கிட்டு, கடலூர், சிதம்பரம் மண்டல அமைப்பு செயலாளர் சு.திருமாறன், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அ.க.தமிழ்மாறன், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி துணைச் செயலாளர் சா.மன்னர்மன்னன், ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
மாநில அமைப்பு செயலாளர் கவிஞர்.கி.இளமாறன், வி.தொ.பா. இயக்கம் – மாநில செயலாளர் வீர.செங்கோலன், வழக்கறிஞர் அணி சீனிவாசராவ், தலைமை நிலையச் செயலாளர் யாழ்ப்பாணன், ஆகியோர் சிறப்புரை வழங்கினர். கரும்புலி முத்துக்குமார் பாசறை பெ.இளமாறன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெ.வீரமுத்து, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் சி.கதிர்வாணன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் எ.வெற்றியழகன், மா.இடிமுழக்கம், சி.அய்யாக்கண்ணு, வேப்பந்தட்டை ஒன்றிய துணைச் செயலாளர் து.இனியன் (எ) மதுபாலன், பல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றறப்பட்ட தீர்மாணங்கள் :
ஆகஸ்டு 17 இன்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். சென்னையில் நடைபெறும் மதச்சார்பின்மை மாநாட்டில் பெருந்திரளாக கலந்துகொள்வது என்றும்,
குஜராத்தில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதிற்க்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டும்,
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை இழிவாக பேசிய தயாசங்கர் சிங்கை தேசிய வன்கொடுமை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி தீர்மாணம் .
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காருக்குடி கிராமத்தில் கோயிலில் நுழையவும் வழிபடவும் அக்கிராமத்தில் உள்ள தலித் மக்களுக்கு உரிமை கோரியும் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.
வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள கோயில் நிலங்களை தலித் மக்களுக்கும் ஏலத்தில் பங்கு கொள்ள வழி செய்யக் கோரியும்,
பருவமழை துவங்க இருப்பதால் ஏரி, குளங்களை தூர் வாரி மழை நீரை சேகரிக்கவும்,
விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடன்களை இரத்து செய்ய கோரிய தமிழக அரசை வலியுருத்தியும்,
இந்தியா முழுவதும் தலித் மக்களுக்கு எதிராக தினந்தோறும் கொடுமைகளை வேடிக்கை பாக்கின்ற பிஜேபி அரசை வன்மையாக கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர் நகர பொருளாளர் தங்க.சண்முகசந்தரம் நன்றி கூறினார்.