Sinks into a lake near the driver of the truck accident to sleep near in Perambalur; Driver who survives by jumping!


பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை லாரி டிரைவருக்கு ஏற்பட்ட தூக்கத்தால், லாரி ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தூக்கத்தில் இருந்து சுகாதரித்த டிரைவர் லாரியில் இருந்து வெளியே குதித்ததால் நூலிழையில் உயிர் தப்பினார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டாராப் பகுதிகளில் இருந்து லாரிகளில் தினமும் இரவில் பெரம்பலூரில் நடக்கும் கட்டிட பணிகளுக்காக செங்கற்கள் அடுக்கி கொண்டு வரப்படுவது வழக்கம். நேற்றிரவு புறப்பட்ட செங்கல் லாரி ஒன்று பெரம்பலூரை நோக்கி ஆத்தூர் – பெரம்பலூர் சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது பெரம்பலூர் அருகே உள்ள எசனை ஏரிக்கரை அருகே வந்து கொண்டிருந்த போது டிரைவருக்கு தூக்கம் வந்துள்ளது. அதனால் லாரி ஓடிக் கொண்டிருக்கும் போதே சில நொடிகள் கண் அயர்ந்தால், கட்டுப்பாட்டை இழந்த லாரி ஏரிக்கரையில் உள்ள தடுப்பில் மோதிய சத்தம் கேட்டு விழித்த டிரைவர் சக்திவேல் கதவை திறந்து குதித்தார். அடுத்த சில வினாடிகளில், தடுப்புகளை உடைத்த லாரி அங்கிருந்த மதகில் பலமாக மோதி ஏரிக்குள் கவிழ்ந்தது. தண்ணீர் இல்லாத ஏரியில் டிரைவர் குதித்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக வந்தவர்கள் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!