Siruvachoor the inauguration of Sri Annai Paramedical College today
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில், புதியதாக இன்று ஸ்ரீ அன்னை பாராமெடிக்கல் கல்லூரி திறப்பு இன்று நடந்தது.
சிறுவாச்சூரில் தீபம் அறக்கட்டளை கடந்த 2012 ஆண்டு முதல், பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக ஸ்ரீ அன்னை பாராமெடிக்கல் கல்லூரி திறப்பு இன்று அறக்கட்டளை நிறுவனர் ஆனந்தி அழகேசன் தலைமையில் நடந்தது.
கல்லூரி முதல்வர் மாரியாயி முன்னிலை வகித்தார். கல்லூரி வளாகத்தை மருத்துவர்கள் சிவா, நேரு ஆகியோர் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதாக வாழ்த்துரை வழங்கிய அண்ணாமலை பேசியதாவது: பிற்படுத்தப்பட்ட பகுதியான நமது பகுதியில் இக்கல்லூரி துவக்கப்பட்டது நல்ல முயற்சி. வேலை வாய்ப்பில் பாரா மெடிக்கல் படிப்பிற்கு நல்ல வாய்ப்புள்ளது.
தொடர்ந்து இக்கல்லூரி நன்கு வளர்ந்து இப்பகுதி மக்களை முன்னேறச் செய்து இந்நிறுவனமும் மென்மேலும், வளர வாழத்துகிறேன் என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் அருண்குமார், மகாலட்சுமி அருண்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளர் காரை.சுப்ரமணியன், சிறுவாச்சூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தராஜ், மாவட்ட காசநோய் ஒருங்கிணைப்பாளர் புரட்சிதாசன்,
ஊராட்சி மன்றத் தலைவர் சிவாகமி அண்ணாமலை, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ரெங்கநாதன், முன்னாள் ராணுவ வீரர் சோலைமுத்து மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி ஒருங்கிணைப்பாளர் நன்றி கூறினார்.