Siruvachur Madhurakalyamman Temple Kudamuzku Festival Preparatory Works: Collector Inspection!

பெரம்பலூர் சிறுவாச்சூர் அருகே உள்ள மதுரகாளியம்மன் திருக்கோயில் மற்றும் பெரியசாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் கற்பகம், போலீஸ் எஸ்.பி ஷ்யாம்ளா தேவி முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா 21 ஆண்டுகளுக்கு பின்பு வருகின்ற 05.04.2023 புதன் கிழமை அன்று காலை நடைபெறவுள்ளது. மேலும் சிறுவாச்சூர் அருள்மிகு பெரியசாமி திருக்கோயில் (மலைக்கோயில்) திருக்குடமுழுக்கு விழா 07 ஆண்டுகளுக்கு பின்பு வருகின்ற 27.03.2023 அன்று திங்கள் கிழமை அதிகாலை நடைபெறவுள்ளது. இதை காண்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வர இருப்பதால் அதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள், பாதுபாப்பு பணிகள், குடிநீர், வாகனம் நிறுத்துமிடம், போக்குவரத்து வசதிகள் போன்ற பணிகள் குறித்து விரிவாக கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஆ.கலியபெருமாள், இந்து சமய அறநிலையத்துறை இணைஆணையர் (திருச்சி மண்டலம்) செல்வராஜ், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், துணை காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி, உதவி இயக்குநர் ஊராட்சிகள் திரு.கணபதி, இந்து சமய அறநிலையத்துறை செயற்பொறியாளர் (திருச்சி மண்டலம்) பெரியசாமி, பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ், மதுரகாளியம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் வேல்முருகன் மற்றும் ஆல்மைட்டி பள்ளி தாளாளர் ஆ.ராம்குமார் உள்ளிட்ட திருப்பணிக்குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!