Sleeping Election Commission in Perambalur; DMK candidate Arun Nehru and the public and school students suffered because of the cars that came too much!

அமைச்சர் கே.என் நேருவின் மகன் அருண்நேரு பெரம்பலூர் எம்.பி தொகுதியில் திமுக வேட்பாளராக களம் கண்டு, வாக்குகளை சேகரித்து வருகிறார். இன்று காலை பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூரில் தொடங்கி, செங்குணம், அருமடல், ‌ கவுல்பாளையம், நெடுவாசல், க.எறையூர்,கல்பாடி, அ.குடிக்காடு, அயிலூர், சிறுவாச்சூர்,நொச்சியம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், தம்பிரான்பட்டி, கீழ்க்கணவாய்,வேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி, களரம்பட்டி, அம்மாபாளையம், பாளையம், குரும்பலூர், லாடபுரம், மேலப்புலியூர், நாவலூர், திருப்பெயர், ஆலம்பாடி, சொக்கநாதபுரம், செஞ்சேரி, கோனேபரிபாளையம், வடக்குமாதவி, சோமண்டாபுதூர், கீழக்கரை, எசனை உள்ளிட்ட கிராமங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் வாக்குகளை சேகரித்து வருகிறார்.

இதற்கு அவருடன் அணிவகுத்து சுமார் 50க்கும் மேற்பட்ட கார்கள் அவருடன் வலம் வருகிறது. இதனால் கிராம சாலையில் புழுதி பறக்கத் தொடங்கியது. அப்பகுதியில் இருந்து தேர்விற்கு செல்லும் பள்ளி கல்லூரி வாகனங்கள், மாணவர்கள், பொதுமக்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்பட்டனர்.

தேர்தல் ஆணைய அதிகாரிகள் தூங்கி கொண்டு உள்ளனரா, அல்லது கண்டும் காணமல் உள்ளனரா என்ற சந்தேகம் பொமக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. பல இடங்களில் ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணப்பட்டுவடா வெட்ட வெளியில் அதிகாரிகளுக்கு முன்பே நடக்கிறது. ஆனால், தேர்தல் ஆணைத்தின் அதிகாரிகள் அப்பாவிகள் எடுத்து செல்லும் பணத்தை மட்டும் பிடித்து பறிமுதல் செய்து நேர்மையை நிலை நாட்டுகின்றனர்.

பெரம்பலூர் நாடாளுமன்ற முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் கோடிஸ்வரர்களாக இருப்பதால் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் பணப்புழக்கம் அதிகரித்து உள்ளது.

தேர்தல் ஆணையத்தால் பதியப்பட்ட வழக்குகள் இதுவரை எந்த தண்டனையும் வாங்கி கொடுத்ததாக தெரியவில்லை என்பதால், அரசியல்வாதிகளுக்கு நல்வாய்ப்பாகிவிட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!