பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் எறையூர் கிராமம், காலனித் தெருவைச் சேர்ந்தவர் பழனிமுத்து மகன் அய்யாசாமி (55). இவர், அதே பகுதியில் புதிதாக கட்டி வரும் மாடி வீட்டுக்கு கடந்த 20 ஆம் தேதி தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
பலத்த காயமடைந்த அய்யாசாமி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மகன் பெரியசாமி (30) அளித்த புகாரின்பேரில், மங்கலமேடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுந்தரம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.