Slipped and fell from a two-wheeled vehicle a merchant Kills near in PERAMBALUR
பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி மகன் சின்னையன் (வயது 45) இவர் மரங்களை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார், மேலும் திமுக வின் அத்தியூர் 3-வது வார்டு செயலாளராகவும் உள்ளார்.
சின்னையன் நேற்று முன்தினம் இரவு அத்தியூர் அருகே உள்ள அகரம்சீகூர் என்ற கிராமத்திற்கு தனது சொந்த வேலையாக சென்று விட்டு இரவு 11. மணியளவில் தனது சொந்த கிராமத்திற்கு இரு சக்கர வாகனத்தில் திரும்ப வந்து கொண்டிருந்தார்.
அப்போது அத்தியூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சின்னையன் வந்த இரு சக்கர வாகனம் தடுமாறியதால் சாலையில் அருகே உள்ள பள்ளத்தில் வீழ்ந்தார். இதில் அவர் தலையில் பலத்த காயமடைந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவ்வழியாக சென்றவர்கள் மங்களமேடு போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார், சின்னையன் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.