பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை வேலூர் கிராமம் பிளளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோகன் (வயது52).
இவர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக த்தில் நடத்துனராக உள்ளார். துறைமங்கலத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை குளியல் அறையில் சிறுநீர் கழிப்பதற்காக சென்ற போது எதிர்பாராதவிதமாக அசோகன் கால் வழுக்கியதில் கீழே விழுந்தார்.
அவரது தலையில் பலமான அடிபட்டது. அவரது அலறல் சத்தத்தை கேட்ட உடன் அங்கிருந்த குடியிருப்புவாசிகள் உடனே அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக அசோகன் திருச்சி அரசுமருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்க்பட்டது. அங்கு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அசோகனின் சகோதரர் பாஸ்கரன் கொடுத்த புகாரின் வழக்குப் பதிவு செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.