snake bite farmer death near in perambalur
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் ( வயது 28), விவசாயியான இவர் நேற்றிரவு வயலுக்கு சென்றுள்ளார். அப்போது வயலில் நடந்து சென்ற போது பாம்பு கடித்துள்ளது. உடனே அவர், அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.