So far 3 candidates have filed nominations to contest in Perambalur constituency

பெரம்பலூர் திமுக வேட்பாளர் பிரபாகரன்
பெரம்பலூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட நேற்று 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பெரம்பலூர் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக சப்-கலெக்டர் பத்மஜா நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். கடந்த 12ம்தேதி வேட்பு மனுதாக்கல் துவங்கியது. அன்றைய தினம் 6 பேர் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவினை பெற்றுசென்றனர். அதே போல் நேற்று (15ம்தேதி) 3 பேர் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவினை பெற்று சென்றனர். இதன்படி இதுவரை 9 பேர் வேட்புமனுவினை பெற்றுசென்றுள்ளனர்.
இதே போல் திமுக வேட்பாளர் பிரபாகரன் தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மாஜவிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். அவருடன் திமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் இரா.தமிழ்ச்செல்வன்
நேற்று முகூர்த்த நாள் என்பதால் அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மாஜவிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். அவருடன் பாமக மாநில துணை தலைவர் செந்தில்குமார், வேப்பந்தட்டை அதிமுக ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் ஆகியோர் உடனிருந்தனர்.
இவர்களுக்கு முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் மகேஸ்வரி, அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ப. அருள் உள்ளிட்டோருடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.