Social justice student movement protest demonstration to cancel the selection of the NEET in Tamil Nadu
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சமூக நீதி மாணவர் இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் சமூக நீதி மாணவர் இயக்கம் (SMI), தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கு, மாவட்ட செயலாளர் தா.பதுவேஜ்பாஷா தலைமை வகித்தார். த.மு.மு.க., மருத்துவ சேவை அணிச் செயலாளர் குலாம் காதர் வரவேற்றார்.

த.மு.மு.க மீரான் மொய்தீன், த.மு.மு.க மாவட்ட செயலாளர் குதரத்துல்லாஹ், மமக பொருப்பாளர்கள் ரஷீத் அஹமது, முஹமது இலியாஸ், முஹமது ஹனீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில துணை செயலாளர் முஹம்மது பிரோஸ், பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் ப.காமராசு, வி.சி.க மாநில துணை செயலாளர் பேரா.முருகைய்யன், தி.க மாவட்டத் தலைவர் துரை.தாமோதரன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

த.மு.மு.க ஊடகப் பிரிவு மாவட்ட செயலாளர் முஹம்மது யாசீன் நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!