Social Workers and Charitable Organizations Award for Outstanding Social Service for the Elevation of Women : Perambalur Collector Info!
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் பெண்கள் மேன்மைக்காக சிறந்த சமூக சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் 2024-ம் ஆண்டிற்கு வழங்கப்பட இருக்கிறது.
இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயது மேற்பட்டவரகவும் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள் , பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை , மொழி , இனம் , பண்பாட்டு , கலை அறிவியல் , நிர்வாகம் போன்ற துறைகளில் மென்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொண்டு நிறுவனம் அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும் .
எனவே இவ்விருதுக்கு தகுதியானவர்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) ) 20.06.2023 மாலைக்குள் ஆன்லைனில் பதிவு செய்து , பதிவு செய்த விவரத்தினை பெரம்பலூர்மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் , பெரம்பலூர் என்ற முகவரியில் அணுகி விண்ணப்பம் செய்த விவரத்தினை தகுந்த ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும் என கலெக்டர் க.கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.